தமிழகத்தில் ஆற்றையே காணாமல் செய்துவிட்டனர், சென்னை ஏரிகளின் கொள்ளளவு குறித்த தகவலை ஆர்டிஐ சட்டத்தில் கிடைக்கவிடாமல் செய்துவிட்டனர் என்று நடிகர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். விளைச்சல் பாதிப்பு, விவசாயிகள் தற்கொலை உள்பட விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக தமிழக அனைத்து விவசாயிகளின் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சிறப்பு கூட்டம் சென்னை அடையார் முத்தமிழ் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன், நீரியியல் வல்லுனர் எஸ்.ஜனகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினர். தமிழகத்தில் இருக்கும் நிலங்கள் கொஞ்சம், கொஞ்சமாக காணாமல் போய்க்கொண்டுள்ளது. ஒரு ஆறே காணாமல் போய்விட்டது. ஒரு சில நாட்களில் அந்த விவரத்தை வெளியிடுகிறோம். அதற்கு எங்கள் நண்பர்கள் எல்லோரும் வேலை செய்துகொண்டுள்ளனர். ஆற்றையே காணாமல் செய்துவிட்டனர் அரசு அதிகாரிகள். முன்பு கிணறை காணோம் என்றனர், இப்போது ஆற்றையே காணோம் என்கிறார்கள்.
Kamal says river has gone missing in Tamilnadu and no information on Chennai ponds capacity in RTI act.