கண்டிப்பா தல...நீ சொன்ன பின்னால சும்மா இருப்பமா..?- வீடியோ

2017-11-04 4

சென்னை வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். மழையால் ஏற்பட்ட வெள்ளத்தேக்கத்தை மாநகராட்சி ஊழியர்கள் மட்டுமின்றி, காவல்துறை, தீயணைப்பு துறையினரும் இணைந்து அகற்றி வருகிறார்கள். வேப்பேரி இன்ஸ்பெக்டர் வீரக்குமார், சாக்கடை அடைப்பை வெறும் கையால் அகற்றிய புகைப்படம் வைரலாக சுற்றி வருகிறது.

வெள்ளம் சூழ்ந்த புறநகர் பகுதிகளிலுள்ள வீடுகளுக்கே காவல்துறையினர் நேரில் சென்று, பிஸ்கெட், பிரெட் போன்றவற்றை வினியோகித்து வருகிறார்கள். இதுபோன்ற ஒரு புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன், தங்கள் பணியையும் தாண்டிச் செல்வோருக்கு நன்றி. சீருடையோடும், இல்லாமலும் கூட நல்ல குடிமக்கள் மிளிருவார்கள். மேலும் பல தமிழர்களும் இதுபோல வேலையையும் தாண்டிய பணிகளில் ஈடுபட வேண்டும். இவ்வாறு ஒரு டிவிட்டில் கமல் கூறியுள்ளார்.

"Thanks for going beyond the call of your duty. Good citizens shine with or without uniform. More similar Thamizhan's should report to duty" Actor Kamal Hassan thank Chennai police officers.

Videos similaires