2013ல் நடந்த ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சிஎஸ்கே, ராஜஸ்தான் அணி குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து சிஎஸ்கே அணிக்கு 2015ல் தடை விதிக்கப்பட்டது. இதன்காரணமாக 2017 வரை சிஎஸ்கே அணியால் ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. இதே சூதாட்ட குற்றச்சாட்டில் கேரளவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து தடை பெற்றார்.
சில நாட்களுக்கு முன் அவர் மீதான தடை உறுதி செய்யப்பட்டு அவர் மீண்டும் அணியில் இணைய இருந்த வாய்ப்பு முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது ''சூதாட்டம் சம்பந்தமாக என்னை தடை செய்த பிசிசிஐ, இந்திய அணியில் இருக்கும் இன்னும் சிலரையும் தடை செய்ய வேண்டும்'' என வித்தியாசமான சில தகவல்களை கூறி ஸ்ரீசாந்த் பகிர் பேட்டி அளித்து இருக்கிறார்
Former Indian cricketer Sreesanth speaks about what his IPL probe. He also added that CSK and many Indian players has done lot of unethical things in IPL 2013.