திருடனை விட்டு விட்டு பொதுமக்களை தாக்கிய உதவி ஆய்வாளர்- வீடியோ

2017-11-03 445

பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையனை பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

கரூர் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்ற பெண்களை பின் தொடர்ந்த போதை கொள்ளையன் அவர்களின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து கொண்டு ஓட முயன்றுள்ளார். அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் அவனை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உதவி ஆய்வாளர் மணிவாசகம் திருடனை பிடிக்காமல் அங்கு கூடியிருந்த மக்களை படம் எடுத்தும் திருடனை பிடிக்க உதவிய இளைஞரை தாக்கியுள்ளார். இதனால் பொதுமக்களுக்கும் உதவி ஆய்வாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Dis : The heroine who followed the Karur bus stand tried to run away from the golden chains wearing on their necks. The people who were there then took him to the chariot.

Videos similaires