பிக்பாஸ் ஷோ மூலம் பலரின் அன்பை விரைவில் பெற்றவர் ஹரிஷ் கல்யாண். இயல்பான குணத்தை வெளிப்படுத்தி பல ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் இப்போது சினிமாவில் பிஸியாகிவிட்டனர். ஹரிஷ் ரைசாவுடன், இளன் இயக்கும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ஹரிஷ் மீண்டும் ஹீரோவாக நடிப்பதாக வெளியான செய்தி அவரது ரசிகர்களை குஷியாக்கியது. இந்நிலையில் சிம்பு இசையில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் ஹரிஷ்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இடையே 53-வது நாள் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்து கடைசி வரை பங்கேற்று இரண்டாவது ரன்னர்-அப்பாக வெற்றி பெற்றவர் ஹரிஷ் கல்யாண். பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போதும், வெளியே வந்தபிறகும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறார்.
Harish kalyan has posted the video of the song in his voice for simbu's music. This title song is for Santhanam's 'Sakka Podu Podu Raja' movie