நீரில் மூழ்கத் தயாராகும் சென்னை-கமல் எச்சரிக்கை- வீடியோ

2017-11-02 18

சென்னையின் தென்மேற்கு வடமேற்குப் பகுதிகள் நீாில் மூழ்கத் தயாராகிக் கொண்டு இருக்கின்றன என்று நடிகர் கமல் எச்சரித்துள்ளார்.
இது அரசுக்கும் மக்களுக்கும் கொடுக்கப்படும் முன்னறிவிப்பு. உடனே செயல் பட்டால் வருமுன் காப்பதாகும். எனக்கு வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன என்று கமல் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வடகிழக்குப் பருவமழை கடந்த 3 நாட்களாக கொட்டித்தீர்க்கிறது. சென்னை மாநகரின் புறநகர் பகுதிகள் இப்போதே தண்ணீர் தேசங்களாகி வருகின்றன. 2015 பெரு வெள்ளத்தில் இருந்து யாரும் இன்னமும் எந்த பாடமும் கற்றுக்கொள்ளவில்லை.
நகரின் மையப்பகுதிகளில் உள்ள பள்ளி மைதானங்கள் நீச்சல் குளங்களாகி விட்டன. இதனால் விடுமுறை அறிவித்து விட்டது மாவட்ட நிர்வாகம். இந்த நிலையில் கமல்சென்னையின் தென்மேற்கு வடமேற்குப் பகுதிகள் நீாில் மூழ்கத் தயாராகிக் கொண்டு இருக்கின்றன. சேலையூா் ஏாி, கூடுவாஞ்சோி, நந்திவரம், முடிச்சூா் ஏாிகள் நிரம்பி வழிய அதிக நேரமாகாது.

Videos similaires