வெல்லத்தில் கலக்கப்படும் பாஸ்பேட் உரம்.. ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்- வீடியோ

2017-11-02 570

தடை செய்யப்பட்ட பொருட்களில் வெல்லம் தயாரிக்கப்படுகிறதா என்று உணவு பாதுகாப்புதுறை அதிகரிகள் சோதனை நடத்தினர்.

சேலம் மாவட்டத்தில் தனியாருக்கு செந்தமான வெல்ல தயாரிப்பு ஆலை உள்ளது. இந்த ஆலையில் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன் படுத்தி வெல்லம் தயாரிக்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது வெல்ல தயாரிப்பின் போது கலப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சக்கரை மூட்டைகள் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்கள் இருப்பதை கண்டறிந்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் அப்பகுதியில் மற்றொரு ஆலையிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சுகாதாரமின்றிய முறையில் வெல்ல தயாரிப்பில் ஈடுபட்டது தெரியவர இரு ஆலை உரிமையாளர்களின் மீதும் அதிகாரிகள் வழக்கு பதிவு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Dis : Detectors found the sugar bags and super phosphate fertilizers that were used to mix during the conquest and were seized by the authorities