வட்டார போக்குவரத்து அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்ட போது கணக்கில் வராத ஆயிரக்கணக்கான ரூபாய்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தில் வாகன பதிவிற்கும், ஓட்டுனர் உரிமம் பெருவதற்கும் லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராத ஆயிரக்கணக்கான ரூபாய்கள் இருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி மோகன் மற்றும் அலுவலர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Dis : Thousands of rupees were not confiscated when they were involved in the raid on the local transport department