கிருஷ்ணகிரியில் அரசு பேருந்துகள் ஜப்தி- வீடியோ

2017-11-02 203

விபத்து வழக்குகளில் இழப்பீடு வழங்காததால் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 5 அரசு பேருந்துகளை அமீனாக்கள் ஜப்தி செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் அரசு பேருந்து விபத்துக்குள்ளாகி பலத்த காயம் அடைந்தும் உயிரிழந்தவர்கள் குறித்த வழக்குகள் நடைபெற்று வந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவையும் மீறி பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு போக்குவரத்து துறையினர் இழப்பீடு வழங்காததால் பேருந்துகளை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 அரசு பேருந்துகளை அமீனாக்கள் ஜப்தி செய்தனர். இச்சம்பவத்தால் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Dis : The Amenas made 5 state buses that were parked at the bus stop because of no compensation in the accident cases

Videos similaires