முதல்வரிடம் நெகிழ்ந்த சசிகலா கணவர் நடராஜன்- வீடியோ

2017-11-02 20,142

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முடிவடைந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை போனில் தொடர்பு கொண்டு பேசிய சசிகலா கணவர் நடராஜன், நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்திருக்கிறார். சசிகலா கணவர் நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. விபத்தில் மூளைச்சாவடைந்த கார்த்திக் என்ற இளைஞரின் உறுப்புகள்தான் நடராஜனுக்கு பொருத்தப்பட்டதாவும் கூறப்பட்டது. இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளில் தமிழக அரசும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் நடராஜன் உடல்நிலை தேறியது. இதையடுத்து நேற்று அவர் வீடு திரும்பினார்.வீடு திரும்புவதற்கு முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை போனில் தொடர்பு கொண்டு நடராஜன் பேசியுள்ளார். அப்போது, நான் உயிருடன் இருப்பதற்கு நீங்கள்தான் காரணம்... இந்த நன்றியை மறக்கமாட்டேன் என நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.

According to the sources, Sasikala Husband Natarajan thanked to CM Edappadi Palanisamy for the organ transplant.

Videos similaires