தேனி கம்பம் மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அதிகாரிகள் தண்ணீர் திறந்து விட்ட காட்சிகள்…
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது மன்னார் வலைகுடா பகுதிகளில் நிலை கொண்டுள்ளதால் வரும் 4ம் தேதி வரை தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் உட்புறங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து திருவள்ளூர், கடலூர், இராமநாதபுரம், நாகை புதுக்கோட்டை, புதுவை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நீலகிரியில் நேற்று கனமழை பெய்தது. வேலூர், விழுப்புரம், திருச்சி, மதுரை, சேலம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. சென்னை நகரில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று இரவு ஆரம்பித்த மழை அதிகாலை வரை வெளுத்து வாங்கியது. இதனால் இரவு பணியாளர்கள் மட்டும் இன்றி வாகன ஓட்டிகளும் சிரமத்திற்குள்ளாகினர். ஒருசில சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Dis : Theni, Kamban, Madurai, Dindigul Districts of Vaigai Dam for irrigation in the districts including Deputy Chief Minister and ministers officials opened water