சிவில் சர்வீஸ் தேர்வில் காப்பியடித்ததாக கைது செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரி ஷபீர் கரீம் மற்றும் அவரது மனைவி ஜாய்ஸ் ஜோய் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். இன்று காலை அவர் சிறைக்கு கொண்டு வரப்பட்ட்டார். சென்னை எழும்பூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நேற்று முதல் நாள் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்ற ஷபீர் கரீம் புளூடூத் கருவியை பயன்படுத்தி காப்பியடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இவருக்கு உதவியாக இருந்த அவரது மனைவி தற்போது சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். ஷபீர் கரீமின் மனைவி ஜாய்ஸ் ஜோய் அவரது ஒன்றரை வயது குழந்தையோடு புழல் சிறையில் அடைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய ஆட்சிப்பணிகளுக்கான தேர்வு நேற்று முதல்நாள் சென்னை எழும்பூரில் இருக்கும் அரசு மாநில பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து இங்கு தேர்வு எழுத வந்து இருந்தனர். இந்த நிலையில் ஐ பி எஸ் அதிகாரியாக இருக்கும் ஷபீர் கரீம் என்பவரும் ஐஏஎஸ் ஆக விருப்பப்பட்டு அங்கு தேர்வு எழுத வந்து இருந்தார். ஆனால் இவர் தேர்வு எழுதும் போது புளு டூத் கருவியை பயன்படுத்தி காப்பி அடித்து இருக்கிறார்.
An IPS officer has caught by special team police while cheating in IAS exam. Police also arrested his wife and teacher who helped him for cheating in UPSC exam from Hyderabad.