பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஹரிஷ் கல்யாண், ரைசா இணைந்து நடிக்கும் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தனது கனவு நிறைவேறிவிட்டது எனக் கூறியுள்ளார் ஹரீஷ்.
கமல்ஹாசன் நடத்திய தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் தற்போது சினிமாவில் வாய்ப்பு குவிந்து வருகிறது.
ஓவியா, ஆரவ் உள்ளிட்டோர் படம் கமிட் ஆகி பிசியாகிவிட்டனர். ஜூலி கலைஞர் டி.வி-யில் ஒரு நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராகக் களமிறங்கிவிட்டார்.இந்நிலையில் தற்போது ரைசா மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். இயக்குனர் இலன் இந்தப் படத்தை இயக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Yuvan Shankar Raja composes music for Biggboss Harish Kalyan and Raiza's new film. 'I grew up listening to his music. Have always wanted to do a film under his music. Dream come true' harish kalyan said.