2015-ல் சென்னையை தெறிக்கவிட்ட ராமாபுரம் அடையாறு இப்போது எப்படி இருக்கிறது?- வீடியோ

2017-10-31 7

2015 சென்னை பெருவெள்ளத்தின் போது நிரம்பியோடிய ராமாபுரம் அடையாறு கால்வாய்ப்பகுதி இந்த 2 நாட்கள் மழைக்குப் பிறகு எப்படி இருக்கிறது என்ற கள நிலவர வீடியோ. வடகிழக்குப் பருவமழை கடந்த 2 நாட்களாக சென்னையை புரட்டிப் போட்டுள்ளது. விடாமல் பெய்த மழையால் மக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகினர். மேலும் மழை இதே போன்று நீடித்தால் 2015ல் ஏற்பட்டது போன்ற பெருவெள்ளம் ஏற்பட்டு விடுமோ என்ற பீதியும் மக்கள் மத்தியில் இருந்தது.ஆனால் இன்று காலை முதல் மழை தணிந்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் சூழ்ந்த நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதே போன்று சாலையில் தேங்கி இருக்கும் நீரும் மோட்டார் வைத்து இறைத்து வெளியேற்றப்படுகின்றன.

How Adyar canal bed at Ramapuram today as Chennai flodds 2015 caused severe damage in this area, a live report of tamil one india.

Videos similaires