ஸ்டாலினின் அறிவிப்பு குறித்து நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர் ஒருவர், முத்துராமலிங்கத் தேவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில், விமான நிலையத்துக்குப் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் இமானுவேல் சேகரன் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. இதை உணர்ந்துதான் 13 கிலோ தங்கக் கவசத்தோடு ஜெயலலிதா நிறுத்திக் கொண்டார். அ.தி.மு.கவின் பிரதான வாக்கு வங்கியில் முக்குலத்தோர் சமூகத்துக்கு கணிசமான பங்கு உண்டு. இருப்பினும் விமான நிலையத்துக்குப் பெயர் வைக்கும் கோரிக்கையை சற்று தள்ளி வைத்தார் ஜெயலலிதா. அனைத்து சமூக மக்களின் ஆதரவோடு பெயர் சூட்டப்பட்டால், அது வரவேற்கத்தக்கதாக இருக்கும் என கருதினார் ஜெயலலிதா. அதனால்தான் விமான நிலையத்துக்கு பெயர் சூட்டும் விவகாரத்தில் ஜெயலலிதா அவசரப்படவில்லை
Here the reasons of Late Jayalalithaa not intrested to renaming of Madurai Airport.