கனமழை எச்சரிக்கை...சென்னை உள்பட 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை-வீடியோ

2017-10-31 1

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானால் மேலும் மழை நீடிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் 30-ஆம் தேதியான நேற்று அதிகாலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பேய் மழை கொட்டியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இடியுடன் கூடிய கனமழை கொட்டியது. இதனால் பள்ளிகளுக்கு விடப்படும் நேரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக குழந்தைகளை வீட்டுக்கு அனுப்புமாறு சென்னை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் நேற்று அறிவித்தனர். கடலூர் மாவட்டத்தில் 9 ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மழைக்கே சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.


North East Monsoon intensifies. Chennai Met warns that there will be heavy rain in coastal areas. So the district administration announces holiday for schools.

Videos similaires