சென்னையை மிரட்டிய மழை: குளமான சாலைகள்...ஸ்தம்பித்த வாகனங்கள்- வீடியோ

2017-10-31 26,160

சென்னையில் நேற்று காலை முதலே மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு, கிண்டி, தி.நகர், சைதாப்பேட்டை, மீனம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணாசாலை, பல்லவாரம், குரோம்பேட்டை, தாம்பரம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. தாழ்வான இடங்களில் உள்ள விடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் தத்தளித்து வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் நேற்றிரவு பலரும் இரவு தூக்கத்தை தொலைத்தனர். கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து முடங்கியது. நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் ஸ்தம்பித்தன. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் அவதிக்கு ஆளாகினர். 6 மணிக்கு அலுவலகம் விட்டும் வீடு செல்வதற்கு 8 மணியானதாக தெரிவித்தனர்.


Heavy rain hit Chennai, triggering traffic snarls in several parts of the city. As the showers intensified on Monday.More showers are predicted across Tamil Nadu over the next few days.

Videos similaires