இந்திய நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கோஹ்லி தலையிலான இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தொடர்ந்து 7 இரு நாடுகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் வெற்றி பெற்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான தோணி மற்றும் டிராவிட்டின் சாதனையை முறியடித்தார்
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, முதலில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதன் முதன் இரண்டு போட்டியின் முடிவில், இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் இருந்தது.
இந்நிலையில் இரு அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி கான்பூரில் நடந்தது. இதில் இந்திய அணி, வெறும் 6 ரன்னில் திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான தொடரை கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 7வது முறையாக கைப்பற்றி அசத்தியது.
kohli yet again beats dhoni dravid captaincy records