பேரனின் திருமணத்தில் கூட பங்கேற்காமல் ஸ்டாலின் அரசியல் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். முக.முத்துவின் பேரனும் கருணாநிதியின் கொள்ளுப் பேரனுமான மனுரஞ்சித்திற்கும் நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டில் இன்று திருமணம் நடைபெற்றது. இதனை திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதில் அழகிரி, கனிமொழி, முரசொலி அமிர்தம், முக தமிழரசு, தயாநிதி மாறன், வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் நடிகர் விக்ரமின் குடும்பத்தினரும் பங்கேற்றனர். ஆனால் மனுரஞ்சித்தின் சின்ன தாத்தாவான ஸ்டாலின் இந்த திருமணத்தில் பங்கேற்கவில்லை.
DMK working president Stalin did not participate in the Grandson marriage. Stalin has gone to Pasumpon for Devar Jayanthi.