நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஜஸ்ப்ரிட் பும்ரா வீசிய அந்த கடைசி ஓவரை நினைத்து நெஞ்சம் உருகிக் கிடக்கிறார்கள் ரசிகர்கள். இப்படி ஒரு கடைசி ஓவர் த்ரில்லரை பார்த்து ரொம்ப நாளாகிவிட்டதால், நேற்றைய 'பைனல்' போட்டி, ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. விருந்தில் இறுதியில் சாப்பிடும் பாயாசம் போல அமைந்தது பும்ராவின் அசத்தல் பந்து வீச்சு. ரோகித் ஷர்மாவும், கேப்டன் கோஹ்லியும் சதம் அடித்து நொறுக்கியதன் காரணமாக 50 ஓவர்களில் 337 ரன்களை குவித்தது இந்தியா. ஆனால் நியூசிலாந்தும் சளைக்கவில்லை.
மார்டின் கப்திலை 10 ரன்களிலேயே பும்ரா வெளியேற்றியபோதிலும், கோலின் முன்ரோ, கேப்டன் கனே வில்லியம்சன் முறையே 75, 64 ரன்களை குவித்து அடித்தளம் அமைத்தனர்.
Jasprit Bumrah's exceptional death bowling is Turning Point of the match against India.