டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்தார் கோஹ்லி

2017-10-30 413

ஒரு நாள் போட்டிகளில் 9,000 ரன்களை கடந்து தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸின் சாதனையை இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோஹ்லி முறியடித்தார். இந்தியா- நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே மூன்று ஒரு நாள் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் முதல் இரு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில் கடைசி ஒரு நாள் போட்டி கான்பூரில் இன்று நடைபெறுகிறது. இதனால் இந்த போட்டியே வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்பதால் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் டாஸை வென்ற நியூசிலாந்து அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தற்போது அணியின் கேப்டன் விராத் கோஹ்லி விளையாடி வருகிறார். கோஹ்லி தனது ஒரு நாள் போட்டிகளில் மொத்தம் 8,917 ரன்களை குவித்திருந்தார்.

Indian team Cricket captain Virat Kohli has breaked the records of South African player AB de Villiers by getting 9,000 runs and above in 202 One Day Internationals.