டெங்கு காய்ச்சல் ஏற்படுவது இயற்கைதான் என்றும் அதை தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
திருச்சி பொன்மலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அதில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சபாநாயகர் தனபால், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
பின்னர் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெங்கு காய்ச்சல் ஏற்படுவது இயற்கை தான் என்றும் அதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறினார். மேலும் எதிர்கட்சி தலைவர் டெங்கு காய்ச்சல் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் கேலி கிண்டல் செய்து வருவதாக தெரிவித்தார்.
Dengue fever is natural Chief Minister said that the Government is undertaking all steps to prevent it.