எண்ணூர் துறைமுகத்தை உதாசீனம் செய்தால் வட சென்னைக்கு ஆபத்து என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று காலை, டிவிட்டரில் அவர் கூறியுள்ளதாவது: "தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஓரு வாய்ப்பு. எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து. முழவிவரம் கீழே" இவ்வாறு குறிப்பிட்டுள்ள கமல், அந்த டிவிட்டின் கீழே சில தகவல்களை இணைத்துள்ளார்.
அதில், கோசஸ்தலையாறு சென்னை அருகே இன்னும் முழுவதும் சாக்கடையாகாமல் மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அது கூவம் அடையாற்றைவிட பன்மடங்கு பெரியி ஆறு. அதன் கழிமுகத்தின் 1090 ஏக்கர் நிலத்தை சுற்றுச்சூழல் சிந்தனையில்லா சுயநல ஆக்கிரமிப்பாளர்களால் இழந்துவவிட்டோம்.
kamal haasan request state government to save north Chennai in his tweets