தங்க தமிழ் செல்வன் பேட்டி-வீடியோ

2017-10-26 5

ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷன் இன்னும் விசாரணையை தொடங்காததற்கு காரணம் ஆட்சியாளர்களின் நிர்வாக சீர்கேடு தான் என்று தங்கதமிழ் செல்வன் குற்றம் சாட்டியுள்ளார்.

சேலத்தில் தினகரன் அணியின் சார்பில் அதிமுகவின் 46வது தொடக்க விழா கூட்டம் நடைபெற்றது. அதில் கொள்ளை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிமுக உட்கட்சி பிரச்சணைகளை நாங்களே பேசி தீர்த்து கொள்வோம் என்றும் இதில் பாஜக ஏன் தலையிட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். மேலும் நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷன் மூன்றுமாத காலத்திற்குள் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது நீதிமன்றத்தின் உத்தரவு. ஆனால் தற்போது 1 மாதம் முடிந்து விட்ட நிலையில் இன்னும் விசாரணை தொடங்கப்படாததற்கு காரணம் ஆட்சியாளர்களின் நிர்வாக சீர்கேடுதான் என்று குற்றம் சாட்டினார்.

Retired Judge Mr.Arumugasamy not started enquiring yet about Jayalalith Death issue.