2.0 திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழா-வீடியோ

2017-10-26 25,027

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. ஏ.ஆர். ரகுமான் இசையில் பிரமாண்டமாக தயாராகி உள்ள ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் நடைபெறுகிறது.

இன்று காலை ரஜினிகாந்த், இயக்குனர் ‌ஷங்கர், அக்‌ஷய் குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பிரமுகர்கள் அவர்கள் தங்கியுள்ள ஓட்டலில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக 7 நட்சத்திர ஓட்டலான பியூரிஜ்- அல்- அரப் சென்றனர்.
அங்கு 2.0 படத்திற்கான உலகளாவிய பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.2.0 படத்தின் இசை வெளியீடு பியுரிஜ் பார்க்கில் வருகிற 27-ந்தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. முதன் முறையாக இதற்கு துபாய் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

12 ஆயிரம் பேர் இந்நிகழ்ச்சியைப் பார்க்க இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள பெரிய மால்களில் ரூபாய் 2 கோடி செலவில் பிரம்மாண்ட எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டு இந்நிகழ்ச்சியை நேரலையாகக் காண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2.O Audio Launch Updates!

VIDEO CREDITS:

Essence 2 by Audionautix is licensed under a Creative Commons Attribution license (https://creativecommons.org/licenses/by/4.0/)
Artist: http://audionautix.com/