பேனர் கலாசாரத்தை ஒழிக்க புதுவை அதிமுக வலியுறுத்தல்
கந்து வட்டி மற்றும் பேனர் கலாசாரங்களை ஒழிக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுவை எதிர்கட்சி சட்டமன்ற தலைவர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுவை எதிர் கட்சி சட்டமன்ற தலைவர் அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் கந்து வட்டி காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பத்தை தொடர்ந்து அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவது போல் புதுவையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும் பேனர் கலாச்சாரத்தால் நகரின் அழகு கெட்டுவதற்கு முதலமைச்சர் நாராயணசாமி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்துள்ளார்.
Puducherry AIADMK president Mr.Anbazhagan urged that the Chief Minister Mr.Narayanasamy to ban the Banners in the City.