துணிக்கடையில் முகமூடி கொள்ளையர்கள் பட்ட பகலில் கத்தியை காட்டி மிரட்டி பணம் லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் கிச்சிபாளையம் பகுதியில் துணிக்கடை மற்றும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருபவர் பிரவீன் மௌரியா. இவரது துணிக்கடையில் 3பேர் கொண்ட கொள்ளை கும்பல் முகமூடி அணிந்து கடைக்குள் புகுந்துள்ளனர். பின்னர் கத்தியை எடுத்து பிரவீன் மௌரியா கழுத்தில் வைத்து கல்லாவில் இருந்த பணம் மற்றும் லேப்டாப், செல்போன்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்ட பகலில் நடைபெற்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Three Thieves got arrested in a Textile Showroom for robbery at Salem.