காலையில் செல்போன் டவரில் ஏறி பரபரப்பைக் கிளப்பிய வாலிபர்-வீடியோ

2017-10-26 7,759

பட்டினப்பாக்கத்தில் செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள செல்போன் டவரில் ஏறியுள்ள இளைஞர் அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டி வருகிறார். அ'ருகில் இருந்தவர்கள் எடுத்துக் கூறியும் அந்த இளைஞர் கீழே இறங்க மறுத்துவிட்டார்.

தகவலறிந்து வந்த போலீசார் செல்போன் டவரில் ஏறியுள்ள இளைஞரிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அந்த இளைஞரின் பெயர் ராக்கி என்பது தெரியவந்தது. நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட அனிதாவுக்காக என்ன செய்தாய் என தனது காதலி கேட்டதால் தான் இந்த முடிவை எடுத்ததாக ராக்கி கூறினார். இதையடுத்து அவரை மீட்ட போலீசார் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இளைஞரின் தற்கொலை மிரட்டலால் அப்பகுதியில் காலையிலேயே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைக் காண ஏராளமான மக்கள் அங்கு திரண்டனர்.

A youth threatening suicide commitment in Chennai Patinappakam. He demanded to cancel neet exam. Police rescued him

Videos similaires