கொடுங்கையூர் தீ விபத்தில் ரயில்வே ஊழியரின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் உயிரிழந்துள்ளனர். சென்னை கொடுங்கையூர் முத்தமிழ்நகரைச் சேர்ந்தவர் வெங்கடபிரகாஷ். ரயில்வே ஊழியரான இவருக்கு கீதா என்ற மனைவியும் சர்மிளா என்ற 24 வயது மகள் மற்றும் 20 வயதில் கிஷோர் என்ற மகனும் இருந்தனர். கடந்த 23 ஆம் தேதி அதிகாலையில் எழுந்த வெங்கடபிரகாஷ், வீட்டில் மின் விளக்கு சுவிட்சை போட்டார். அப்போது சமையல் கியாஸ் கசிவு ஏற்பட்டு கியாஸ் பரவி இருந்ததால் தீப்பிடித்து வீடு முழுவதும் எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்தில் வெங்கடபிரகாஷ், கீதா, சர்மிளா, கிஷோர் ஆகிய 4 பேரும் உடல் கருகினர். ஆபத்தான நிலையில் அனைவரும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
In Kodungaiyur fire accident deaths toll increased four. A railway employee family dea in the accident