நவம்பர் 8ம் தேதிக்காக ஒட்டுமொத்த இந்தியாவும் காத்திருக்கிறது. கடந்த ஆண்டு அதே நாளில்தான் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழித்து மக்களின் வயிற்றில் அடித்தது மத்திய அரசு. அந்த நாளில் மத்திய அரசுக்கு தனது கண்டனத்தை செலுத்த ஒட்டுமொத்த தேசமும் தயாராகி வருகிறது. அதற்கு முதல் நாள் தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் புயல் மையம் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அது கமல் புயல். நானும் ரவுடிதான் ரேஞ்சுக்கு நானும் அரசியல்வாதிதான் என்று கூறி டிவிட்டரிலும், வெளியிலுமாக அரசியல் ரீதியான கருத்துக்களையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார் கமல்ஹாசன் . சமூக கோபத்தையும் அவ்வப்போது காட்டிக் கொண்டிருக்கிறார்.
Sources say that Actor Kamal Haasan may announce his political entry on his birth day, November 7