எச். ராஜாவுக்கு நச் பதிலடி தந்த விஜய்!

2017-10-25 23

மெர்சல் திரைப்படத்தை வெற்றியடையச் செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் எப்போதும் போல ஜோசப் விஜய் என்றே குறிப்பிட்டுள்ளார். ஜோசப் விஜய் என குறிப்பிட்டு அவருக்கு மதச்சாயம் பூச முயன்ற பாஜகவினருக்கு பதிலடி தரும் வகையில் அதே பெயரில் அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய்.


விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவைகள் குறித்து விமர்சனங்கள் இடம் பெற்றிருந்தன. உடனே தமிழக பாஜகவினர் வரிந்து கட்டிக் கொண்டு வந்துவிட்டனர்.இதன் உச்சகட்டமாக, நடிகர் விஜய், ஒரு கிறித்துவர்; அவரது பெயர் ஜோசப் விஜய் என்பதால் மத்திய அரசை விமர்சிக்கிறார் என நஞ்சை கக்கினார் பாஜக தேசிய செயலர் எச். ராஜா. அவரது இந்த விமர்சனத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது.ஆனாலும் அடங்காத எச். ராஜா, விஜய்யின் இயற்பெயரான ஜோசப் விஜய் என அச்சிடப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை, லெட்டர் பேடு ஆகியவற்றையும் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அநாகரிகத்தை தொடர்ந்தார். இதுவும் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது.

Actor Vijay has thanked to his fans for his suppor to Mersal movie.