ஆட்சியர் ரோகினியின் தனது நடவடிக்கையால் அதிரடி காட்டி வருகின்றார். இதனால் அவருக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டத்தின் 171 ஆவது கலெக்டராக ரோகினி ராம்தாஸ் கடந்த ஆகஸ்ட்டு மாதம் பதவியேற்றார். இவர் சேலம் மாவட்டத்தின் முதல் பெண் கலெக்டர் ஆவார்.
ரோகினி, 2008-ம் ஆண்டில் நடைபெற்ற ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று, திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் சப்-கலெக்டராக தனது பணியை தொடங்கினார். அப்போது தாமிரபரணி ஆற்றில் இரவு நேரத்தில் மணல்திருட்டில் ஈடுபட்டவர்களை மடக்கிபிடித்து பாராட்டுக்களைப் பெற்றார்.சப் கலெக்டராக இருந்தபோதே கெத்து காட்டிய ரோகினி சேலம் கலெக்டராக பொறுப்பேற்றதில் இருந்து பின்னி பெடலெடுத்து வருகிறார்.
சேலம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற முதல் நாளே மக்களுக்கு தேவையான வசதிகள் அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு நடத்தி கிலியை கிளப்பினார்.மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக நாற்காலிகள் உள்ளிட்டவற்றை வழங்கினார். அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து நடவடிகை எடுப்பதாக உறுதியளித்தார் ஆட்சியர் ரோகினி.
Salem Collector Rohini getting more respect from public. Collector Rohini acting fastly on public issue.