நடிகை அசின் சென்ற வருடம் மைக்ரோமேக்ஸ் நிறுவன அதிபர் ராகுல் ஷர்மாவை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 'இன்று எங்களுக்கு தேவதை போல பெண் குழந்தை பிறந்திருக்கிறாள். கடந்த 9 மாதங்கள் எங்கள் இருவருக்கும் மறக்க முடியாத தருணங்கள்.' என ராகுல் ஷர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 'தேவதை போல பெண் குழந்தை பிறந்திருக்கிறது. எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி கொள்ள கடமைப்பட்டுள்ளேன். அவள் என்னிடம் கேட்கும் சிறந்த பிறந்தநாள் பரிசு இதுதான்!' என இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார் அசின். அசின் பிறந்தநாள் அக்டோபர் 26 என்பது குறிப்பிடத்தக்கது.
Actress Asin and Micromaxx founder Rahul Sharma are welcome their first child on October 24. 'She is the best birthday present I could ever ask for!', Asin posted on instagram.