டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக அறிவித்தனர். இதுகுறித்து ஆளுநருக்கும் கடிதம் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து ஆதரவை திரும்பப்பெறுவது குறித்து நேரில் விளக்கம் அளிக்க சபாநாயகர் தனபால் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு நோட்டிஸ் அனுப்பினார். இதுதொடர்பாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று நேரில் விளக்கம் அளிக்க வேண்டும்.
ஆனால் கடந்த 5 நாட்களாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவு எம்எல்ஏவான தங்க தமிழ்ச்செல்வன், சபாநாயகரை சந்திக்கும் திட்டமில்லை என்று கூறினார்.
TTV Dinakaran support MLA Thanga tamilselvan says that they will not meet speaker. He accused that BJP playing drama with OPS and EPS.