11வது பெண்கள் உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டி , இங்கிலாந்து மற்றும்
வேலஸ்யில் சனிக்கிழமை துவங்கியது.மகளிர் உலககோப்பை கிரிக்கெட்டி லீக்
போட்டியில், 35 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி
பெற்றது. மகளிர் உலக கோப்பையில் இன்று மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய
அணியும், ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின. டெர்பியில்
இந்த போட்டி நடைபெற்றது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு ஆட்டம்
ஆரம்பித்தது. டாசில் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பந்து வீச்சை
தேர்ந்தெடுத்தார்.
ICC 2017 Women's Cricket World Cup Begun, India bat first
against England.England captain Heather Knight has won
the toss and her team would field first. Mithali Raj says
she would have preferred to bowl too.