தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூவை திமுக எம்எல்ஏக்கள் தெர்மாகோல் தெர்மாகோல் என கிண்டலடித்ததால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.நீர் ஆவியாவதைத் தடுக்க திட்டமிட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ கடந்த சில நாட்களுக்கு முன்பு வைகை ஆற்றில் தெர்மாகோலை போட்டு மூடினார். ஆனால் காற்றின் வேகத்தால் தெர்மாகோல் அட்டைகள் தண்ணீரில் போட்ட சில மணி நேரங்களிலே கரை ஒதுங்கியது.இதனை திமுக செயல்தலைவ்ர ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உட்பட பலரும் விமர்சித்தனர்.
DMK MLAs called minister Sellur Raju in the assembly as Thermocol Thermocol. This slogan made a sound of laugh in the assembly.