Vijay Mallya turns up Virat Kohli's charity bash andVirender Sehwag's two-line resume

2017-06-07 0

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி நடத்தும் தொண்டு நிறுவனத்துக்கான நிதி திரட்டும் நிகழ்ச்சி லண்டனில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் இந்திய அணி வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கி விட்டு தலைமறைவாக இருந்து வரும் தொழில் அதிபர் விஜய் மல்லையா யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Absconding businessman Vijay Mallya was one of the attendees of Virat Kohli’s charity ball in London to raise funds for Justice and Care organisation


இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் நேர்காணலுக்கு, வெறும் இரண்டே வரிகளில் பயோடேட்டா அனுப்பியுள்ளார் வீரேந்திர சேவாக். இந்திய கிரிக்கெட் அணிக்கு, தற்போது தலைமை பயிற்சியாளராக செயல்படுபவர் அனில்கும்ப்ளே. அவரது பதவிக்காலம் இம்மாதம் 18ம் தேதியோடு நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய பயிற்சியாளருக்கான தேடுதலை பிசிசிஐ தொடங்கியுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரரும், அதிரடி பேட்ஸ்மேனுமான வீரேந்திர சேவாக்கும், இப்பதவிக்கு விண்ணப்பம் அளித்துள்ளார். இதையடுத்து நேர்காணலுக்கான பயோடேட்டாவை சேவாக் அனுப்பியுள்ளார்.

Former Indian batsman Virender Sehwag had sent a two-line application to the BCCI for the Indian Cricket Team coach's job, according to The Indian Express' report.