கரூரில் பசுமை பூங்காவை கண்டுபிடித்து தர கோரி நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு 15 February 2016

2016-02-23 526

Green Park Finding the petition to the district collector to demanding party NTK

கரூரில் பசுமை பூங்காவை கண்டுபிடித்து தர கோரி நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

கரூர் பெருநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமத்தில் பசுமை பூங்கா அமைப்பதற்க்காக ரூ5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் தமிழக அரசின் 4 ஆண்டுகள் சாதனைகள் அடங்கிய புத்தகத்தில், இன்று அதிமுகவினர் வழங்கிய சாதனை கையேடில் இடம்பெற்றிருந்ததை அறிந்த நாம் தமிழர் கட்சியின் கரூர் தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் நன்மாறன் கட்சி நிர்வாகிகளுடன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு ஒன்றினை அளித்தார்.

அதில் கரூர் நகராட்சி நிர்வாகத்தால் கட்டப்பட்டுள்ள பசுமை பூங்காவை கண்டுபிடித்து தருமாறு அம்மனுவில் கூறப்பட்டிருந்தது. பின்னர் இது குறித்து செய்தியாளர்களிட,ம் அவர் கூறுகையில் தமிழக அரசின் 4 ஆண்டுகள் சாதனைகள் அடங்கிய புத்தகத்தில் கரூர் பெருநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமத்தில் பசுமை பூங்கா அமைப்பதற்க்காக ரூ5 கோடி நிதி ஒதுக்கி அது பொதுமக்கள் பயன்பாடிற்க்குள்ளதாகாவும் அந்த புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது. இது முற்றிலும் மறுப்பதாக தெரிவித்தவர். பசுமை பூங்கா முலுமையாக கட்டபடவில்லை எனவும் பொதுமக்களுக்கு பயன்பாடில் உள்ளதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானதாகவும் கூறியவர் அவ்வைடத்தில் பாதுகாப்பில்லாத பூங்கா முட்புதர்கள் அண்டியும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதாக குற்றம் சட்டியுள்ளார் கரூர் மக்களின் வரிபணத்தில் கட்டப்பட்ட பசுமை பூங்காவினை காண்டுபிடித்து அதை பொதுமக்களின் பயன்பாடிற்க்கு விட வேண்டும் என்றும் பசுமை பூங்கா இல்லையெனில் அந்த துறை அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் பூங்கா இல்லாதபட்சத்தில் கரூர் நிர்வாகத்தை கண்டித்து அறவழியில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

பேட்டி – நன்மாறன் – கரூர் தொகுதி வேட்பாளர் நாம்தமிழர் கட்சி.

Videos similaires