'பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறந்தது
சிறுத்தையே வெளியே வா...
எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வௌியில்!
நம்பினை பகலினை நள்ளிருள் என்றே
சிம்புட் பறவையே சிறகைவிரி! எழு!
சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி!
இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா?
கைவிரித் துவந்த கயவர், நம்மிடைப்
பொய்வி ரித்துநம் புலன்கள் மறைத்துத்
தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி
நமக்குள உரிமை தமக்கென் பார்எனில்,
வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?
மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!
இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும்
புகழ்ச்சி யேஎம் பூணாம் என்றும்
வையம் ஆண்ட வண்டமிழ் மரபே
கையி ருப்பைக் காட்ட எழுந்திரு!
இங்குன் நாட்டுக்கு இழிகழுதை ஆட்சியா? - சீமான் | Need Tamils Unity to Destroy Strangers Rule - Seeman
-------
நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | Naam Thamizhar Katchi Official Videos | Seeman Videos | Seeman Speeches | Naam Tamilar Party Latest Videos