LTTE Black Tigers planes Attack Colombo in Live - LTTE AIR ATTACK COLOMBO in Sri Lanka

2015-02-23 4

* "தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைசிறந்த நீலப்புலி வானோடிகள் - தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் வான்கரும்புலிகள் - நீலப்புலி கேணல் ரூபன், நீலப்புலி லெப்.கேணல் சிரித்திரன் அவர்களின் 06 ஆம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் இன்று"...!!! - 20/02/2015

[20/02/2009 -> 20/02/2015]

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைசிறந்த நீலப்புலி வானோடிகளும் [தமிழீழ வான்படை], முக்கிய பல வெற்றிகரமான வான் தாக்குதல்களை சிறிலங்கா படைத் தளங்கள் மீது நடத்திய நீலப்புலி வானோடிகளும், தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில்...! தமிழீழ வரலாற்றில்...! தமிழர்களின் வரலாற்றில்...! முதல் வான்கரும்புலிகளான நீலப்புலி கேணல் ரூபன், நீலப்புலி லெப்.கேணல் சிரித்திரன் அவர்களின் ஆறாம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் இன்றாகும்.

சிறிலங்காவின் தலைநகரில் உள்ள சிறிலங்கா வான்படைத் தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படைத் தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் வான்கரும்புலிகள் நீலப்புலிகளான நீலப்புலி. கேணல் ரூபன், நீலப்புலி. லெப்.கேணல் சிரித்திரன அவர்ககள் 20/02/2009 அன்று வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தினர்.

சிறிலங்காவின் தலைநகரில் உள்ள சிறிலங்கா வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான் படைத் தளமும் தமிழீழத் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும்.

தமிழீழத் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா வான்படையின் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து என்பது இங்கு குறிப்பிடத்தக்க முக்கிய விடயமாகும்.

சிறிலங்காவின் இத்தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் வான்கரும்புலிகளான நீலப்புலி. கேணல் ரூபன், நீலப்புலி. லெப்.கேணல் சிரித்திரன ஆகிய இரு விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் வான்கரும்புலிகள் [நீலக்கரும்புலிகள்] வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.

இந்த வெற்றிகரமான வான் தாக்குதல்களில் வீரச்சாவை தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் வான்கரும்புலிகளான நீலப்புலி. கேணல் ரூபன், நீலப்புலி. லெப்.கேணல் சிரித்திரன ஆகிய இரு விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் வான்கரும்புலிகள் [நீலக்கரும்புலிகள்] நீலப்புலி. கேணல் ரூபன், நீலப்புலி. லெப்.கேணல் சிரித்திரன ஆகிய இரு தமிழீழ விடுதலைப் புலி மாவீரர்களின் வரலாறு என்றும் தமிழீழத் தமிழ் மக்களின் நெஞ்சில் நிலைத்து நிற்க்கும்.

*"தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைசிறந்த நீலப்புலி வானோடிகள், வான்கரும்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன ஆகியோர்களின் திறமையான வீரச்செயல்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களால் "நீலப்புலிகள்" என்ற தமிழீழ தேசிய விருது இந்த இரு மாவீரர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

சுதந்திர தமிழ் ஈழத் திருநாட்டின் விடுதலைக்காய் தரையிலும் - கடலிலும் - வானிலும் தம்மை அர்ப்பணித்து தமிழ் ஈழ விடுதலைக்கான பயணத்தில் விழிமூடிய இப் புனிதவதிகளை...புனிதர்களை இன்றைய நாளில் நினைவு கூருகின்றோம்.

தமிழ் ஈழத் தாய் மண்ணை எதிரிகளின் வல்வளைப்பிலிருந்து காப்பதற்காய் [விடிவிப்பதற்காய்] தரையிலும் - கடலிலும் - வானிலும் தமது இனிய, இளைய, வீர இன்னுயிர்களை ஈகம் செய்து விழிமூடிய இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் எமது நெஞ்சில் நிறுத்தி தலை சாய்த்து எமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

- பா.பாலா