மாதம்பையில் (இலங்கை) நடந்தது என்ன - ஜமாஅத்தே இஸ்லாமியின் அராஜகம்

2014-02-15 98

மாதம்பையில் நேற்றைய தினம் ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தினரினால் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தஃவா நிலையம் உடைக்கப்பட்டு, மத்ரஸா மாணவர்களின் தளபாடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு, புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் கிளித்து எறியப்பட்டு, பொருட்கள் சூரையாடப்பட்டது.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் மாதம்பை கிளை சார்பாக கடந்த 03 வருடங்களுக்கும் மேலாக மாதம்பையில் ஏகத்துவப் பிரச்சாரம், சமூக பணிகள், மாணவ மாணவிகளுக்கான கல்வி கருத்தரங்குகள், சிறுவர்களுக்கான குர்ஆன் மத்ரஸா ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாதம்பை என்பது ஜமாஅத்தே இஸ்லாமியினரை அதிகமாக கொண்ட ஓர் ஊராகும். மாதம்பை குட்டி மதீனா என்று இவர்களினால் புகழப்படும் அளவுக்கு அவர்களின் ஆதிக்கம் அங்கு அதிகமாக இருக்கின்றது.

தவ்ஹீத் சகோதரர்கள் அங்குள்ள பெரிய பள்ளிவாயலில் நடக்கும் மார்க்கத்திற்கு முரனான, பித்அத்தான காரியங்களை சுட்டிக் காட்டி அவற்றை நிறுத்தி விட்டு குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் பள்ளியை நடத்துங்கள்! பொது மக்களுக்கும் இதனை போதனை செய்யுங்கள்! என்று பல விடுத்தம் கோரிக்கை விடுத்தும் மார்க்கத்தை விட தமது அமீரையும், ஜமாஅத்தின் கருத்தையும் முன்னுரிமை கொடுத்து பின்பற்றும் ஜமாஅத்தே இஸ்லாமியின் பள்ளி நிர்வாகத்தினர் இதனை மறுத்து விட்டார்கள்.

மேலும் விபரம் அறிய : http://www.sltj.lk/2014/02/15/madhampe-nanandhathu-enna/