கடையநல்லூரை குஜராத்தாக மாற்ற சதி - முறியடித்த டிஎன்டிஜே
(தினம் ஒரு தகவல்)
கடையநல்லூரில் மாவடிகால் என்ற பகுதியில் இந்து முன்னணி சார்பாக கொடியேற்றும் நிகழ்ச்சி என்று சொல்லி கடந்த ஜனவரி 31 அன்று அங்கு உரை நிகழ்த்திய இந்து முன்னணி தீவிரவாதி இளாம் கவி அரசன் என்பவன், “முஸ்லிம்களை கொல்ல வேண்டும்; குண்டு வீசி கொல்ல வேண்டும்; வெடிகுண்டு கிடைக்காவிட்டால் நாங்களே வெடி குண்டு தருகின்றோம்; அல்லது வெடிகுண்டுகளை தயாரிக்க நாங்களே கற்றுத்தருகின்றோம்” என்று கலவரக்கொடியேற்றி கலவர குண்டை வீசியுள்ளான். இதன் மூலம் கடையநல்லூரையும் குஜராத்தாக மாற்ற சதி செய்துள்ளனர் இந்த இந்து முன்னணி தீவிரவாதிகள்.
கலவரத்தை தூண்டும் விதத்தில் பேசிய இந்து முன்னணி தீவிரவாதிகளை கைது செய்யக்கோரி தவ்ஹீத் ஜமாஅத் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கடந்த ஞாயிறன்று கடையநல்லூர் காவல்நிலையம் முன்பு திரண்டதால் அரண்டு போன காவல்துறை உடனடியாக இந்து முன்னணி தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக சொல்லி உறுதிமொழி அளித்து தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த முஸ்லிம்கள் கலைந்து சென்றன.
அல்லாஹ்வுடைய கிருபையைக் கொண்டு திங்கள் கிழமை அன்று இந்து முன்னணியின் மாவட்ட நிர்வாகி சிவா என்ற தீவிரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர். இவன் தான் கடையநல்லூரில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றவன். வெறிப்பேச்சு பேசிய இளம்கவி அரசன் என்ற மற்றொரு தீவிரவாதி தலைமறைவாகிவிட்டான். அவனை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்திவருவதாக தகவல் கொடுத்துள்ளது.
அல்லாஹ்வின் அருளால் முறியடிக்கப்பட்ட கலவர சதி குறித்தும், முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்தும் விளக்குகின்றது இன்றைய தினம் ஒரு தகவல்